நீரின்றிய வாழ்வு மிகவும் கொடியது! நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் - உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர்.







திர்கால சந்ததியினருக்கும், இளம் தலைமுறையினருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் நீரினை சிக்கனமாகவும், கண்ணியமாகவும் பயன்படுத்த வேண்டியது இப்பூமியிலுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.நீரின்றிய வாழ்வு மிகவும் கொடியது என தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூவக்கர் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சம்மாந்துறை பிரதேச செயலகம் என்பவற்றின் ஏற்பாட்டில் "உலக நீர் தினம்" நிகழ்வு செவ்வாய்க்கிழமை (22) சம்மாந்துறை செல்நெல் மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஐ.எம்.கலில் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
உலக நீர் தினத்தின் கருப்பொருள் "நிலத்தடி நீர் புலப்படாததை புலப்படச் செய்யும்" (Groundwater making the invisible visible) என்பதாகும்.

இங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1903ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் திகதி உலக நீர் தினம், தண்ணீரின் அவசியம், தண்ணீர் பற்றாக்குறைக்கான விழிப்புணர்வு வலியுறுத்தி இத்தினம் உலகளாவிய தினத்தில் கொண்டாடப்படுகிறது.

இன்றைய நாளில் உலகளாவிய ரீதியில் 2.2 மில்லியன் மக்கள் சுத்தமான நீரின்றி சிரமப்படுகின்றனர். நீர், சுகாதாரம் போன்ற விடயங்கள், 2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் என்பதில் இத்தினத்தினுடைய பிரதானமான மையக்கருத்தாகும்.

உலகில் 3/4 பகுதி நீரினால் சூழப்பட்டுள்ளது. அதேவேளை எதிர்கால சந்ததியினருக்கும், இளம் தலைமுறையினருக்கும் கிடைக்கக்கூடிய வகையில் நீரினை
சிக்கனமாகவும், கண்ணியமாகவும் பயன்படுத்த வேண்டியது இப்பூமியியுள்ள ஒவ்வொருவரது கடமையாகும்.
இலங்கையில் பெரும் வளமாக காணப்படுவது நீலத்தடி நீராகும். நீலத்தடி நீர்வளமானது கைத்தொழில் உற்பத்திகள், விவசாயம், மற்றும் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
அத்துடன் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் ஆழமற்ற கிணறுகள் மூலம் நீர் பெறப்படுகின்றன, அத்துடன் ஆற்றுச் சமவெளி, பரந்த சமவெளி பிரதேசங்களில் ஆழமற்ற கிணறுகளில் நன்னீர் பெறப்படுகின்றன.




இலங்கையில் நீர்வளம் மாசடைவது பல்வேறு வழிமுறைகளினுடாக இடம்பெறுகிறது, நீருடன் பல்வேறு கழிவுப் பொருட்கள் சேரும் போது நீர் தன் இயல்பிலிருந்து மாற்றமடையும், மாசடைந்த நீராக கருதப்படுகின்றது.




இலங்கை சிறந்த நீர் வளத்தை கொண்ட நாடாகும். இருப்பினும் நன்னீர் மாசடைவதால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். நாட்டில் பல பகுதிகளில் மக்கள் நன்னீரை பெற முடியாமல், மாசடைந்த நீரினையும், உவர் நீரினையும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.




எதிர்காலத்தில் இவ்வாறான பெரும் நெருக்கடியை மனித சமுதாயம் சந்திக்கும் என்பதை உணர்ந்த ஐக்கிய நாடுகள் அமைப்பு, நீர் வள பற்றாக்குறையை தவிர்க்க, நீர் வளத்தின் திட்டங்களை முன்வைத்து, மாநாடுகளை நடத்தி வருகின்றனர்.




நீரின்றி வாழ்வு மிகவும் கொடியது, தற்போது நவீன உலகத்தில், மூன்று பேரில் ஒருவர் பாதுகாப்பான நீரின்றி வாழ்கின்றனர் என ஆய்வுகள் அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்கின்றன.




இந்நிலை எதிர்காலத்தில் மேலும் 2050ஆம் ஆண்டுகளில் தண்ணீர் பற்றாக்குறையோடு 5.7மில்லியன் மக்கள் வாழ நேரிடுமென அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். ஆகவே கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் 90% வீதமான அழிவுகள் நீரினால் ஏற்பட்டதாகவும், நீருக்கான தேவை 50% சதவீதம் அதிகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




பாதுகாப்பற்ற குடிநீர் காரணமாக ஏற்படும் நோய்கள் வருடம்தோறும் கூடிக் கொண்டே செல்கின்றது. ஐக்கிய நாட்டு அமைப்பின் அறிக்கையின்படி 2.1% வீத மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லையென்று சொல்லுகிறது. ஆகவே நீரின் தேவையை உணர்ந்து நாம் சிறந்த முகாமைத்துவமாக செயற்படவேண்டும் என்றார்.




இந்நிகழ்வில் கலை கலாச்சார பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், திணைக்களத் தலைவர், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர், மாணவர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :