தலவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சந்தன பிரதீப் குணதிலக்க



தலவாக்கலை பி.கேதீஸ்-
லவாக்கலை லிந்துலை நகர சபையின் புதிய தலைவராக இன்றைய தினம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சந்தன பிரதீப் குணதிலக்க தெரிவு செய்யப்பட்டார். மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் மேனகா ஹேரத் தலைமையில் இன்று (23) நடைபெற்ற நகர பிதாவுக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர் சந்தன பிரதீப் குணதிலக்க பெயரை அதே கட்சியைச் சேர்ந்த பிரசன்ன விதானகே முன்மொழிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் முன்னாள் நகர சபையின் பதில் தலைவருமான லெட்சுமன் பாரதிதாசன் வழிமொழிந்தார். 
அதனால் அதனை தொடர்ந்து வாக்கெடுப்பு இடம்பெறாத நிலையில் 6 பேரின் ஆதரவுடன் புதிய தலைவர் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார் . ஏனெனில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கூட்டணியின் 6 பேரும் எதிர்தரப்பில் 4 பேரும் மாத்திரமே சபையில் இருந்தனர். புதிய தலைவருக்கு 6 பேரின் ஆதரவு கிடைத்ததன் காரணமாக வாக்கெடுப்பு இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில மாதங்களாக தலவாக்கலை லிந்துலை நகர சபையின் தலைவர் பதவி வெற்றிடமாக இருந்தது. அதன் பதில் தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர் லெட்சுமன் பாரதிதாசன் பதவி வகித்தார். இதனையடுத்து 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது இரண்டு தடவைகள் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றைய தினம் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :