“அந்தி பூத்த வைகறை” கவிதை நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)



ஏ.எல்.றியாஸ்-
லுவில் எஸ்.ஜலால்டீன் எழுதிய அந்தி பூத்த வைகறை கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (27) தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.ஏ.மஜீட் தலைமையில் அட்டாளைச்சேனை அல்-ஸகி மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கவிதை நூலினை வெளியீட்டு வைத்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை ஓய்வுநிலை பேராசிரியர் கலாநிதி ஏ.எஸ்.ஆனந்தன் கௌரவ அதிதியாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ், சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் பீ.எம்.அர்ஷாத் அஹமட், தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் புவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி றபீக்கா அமிர்டீன் உள்ளிட்ட பலர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

கலாபூசணம் பாலமுனை பாறூக், எழுத்தாளர் எஸ்.எல்.மன்சூர், கவிஞர்களான சோலைக்கிளி, உமாவரதராஜன், அக்கரையூர் அப்துல் குத்தூஸ் ஆகியோர் இலக்கிய சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் கலைஞர் ஏ.எல்.அன்சார் விழா தொடர்பில் சிறப்புரையாற்றியதுடன், எழுத்தாளர்களான எம்.அப்துல் றஸ்ஸாக், சிறாஜ் மசூர், கலாநிதி எஸ்.எம்.ஐயூப் ஆகியோர் நூல் மீதான உரையினையும் நிகழ்த்தினர்.

கலை, கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில் இலக்கியவாதிகள், கல்வி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், முக்கிஸ்தர்கள் எனப்பலரும் கந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :