வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்!



பைஷல் இஸ்மாயில் -
திருகோணமலை கோபாலபுரம் மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் ஆகியோர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
குறித்த விஜயத்தின்போது, வைத்தியசாலையில் நிலவுகின்ற குறைபாடுகள் மற்றும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்வையிட்டதுடன், சிகிச்சை வழங்கப்படுகின்ற முறை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர். மேலும், வைத்தியசாலையில்
நிலவுகின்ற குறைபாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம்.நிரஞ்சன் மற்றும் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த விஜயத்தின்போது வைத்தியசாலை வளாகத்தில் மூலிகை மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :