உயர்ந்த உள்ளார்ந்த வளங்களையும் வாய்ப்புக்களையும் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவு தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் செயலமர்வு இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சிறுகைத்தொழில் முயற்சியாளர்களின் நலன்கருதி கடந்த 2022.03.13, 14 ஆம் திகதிகளில் இருநாள் கருத்தரங்காக இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.எல்.எம். ஹஸ்பி மற்றும் எம்.எச். இஸ்ரத் அலி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்விற்கு வளவாளர்களாக பிரதேச செயலக கணக்காளர் றிம்ஷியா அர்சாட், கண்கானிப்பு உத்தியோகத்தர் ஐ.எம். நசார் ஆகியோர் கலந்து கொண்டு செயலமர்வை நடாத்தி வைத்தனர். உபாயக் குறிக்கோள்களும் உற்பத்தி வளர்ச்சி, வறுமைக் குறைப்பு, வருமான உருவாக்க நடவடிக்கைகளை உருவாக்குதல் மற்றும் தொழில் வாய்ப்புக்கள், தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் பயிற்சி ஏற்பாடுகள், முறைசார்ந்த நிதியியல் பணிகளுக்கு வசதியளித்தல், பின்தங்கிய பிரதேசங்களில் பொருளாதார நடவடிக்கைகளை வலுப்படுத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பு, உணவினைப் பத்திரபடுத்தல் என்பன தொடர்பில் தெளிவுகள் வழங்கப்பட்டன.
சிறுகைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களமானது, கிராம மட்ட சிறுகைத்தொழில் உற்பத்தியாளர்களின் உற்பத்தி முயற்சிகளை வலுவூட்டும் நோக்குடன் விழிப்புணர்வினை அதிகரிக்கின்ற மற்றும் தேர்ச்சி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடத்தி வருகின்றது. விசேடமாக நாட்டின் அனைத்தையும் உள்ளடக்கிய நிதியியல் வசதிகளின் ஊக்குவிப்பதற்காக நிதியியல் முகாமைத்துவம், தொழில் முயற்சியாண்மை, அபிவிருத்தி, பயிற்சியாளர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கான செயலமர்வு என்பன மீது கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment