மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் புதிய உறுப்பினராக சுயேச்சைக்குழு உறுப்பினரான தங்கராசா ரவீந்திரன் இன்று (24)வியாழக்கிழமை சத்திய பிரமாணம் செய்து கொள்கிறார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் டா. யோகநாதன் தலைமையில் நடைபெறும் 49-வது மாதாந்த அமர்வு இன்று இடம்பெறுகின்றது.
சுயேச்சைக் குழுவில் எலவே உறுப்பினராக இருந்த தியாகராசா தேவரஞ்சன் என்ற உறுப்பினர் காலம் ஆகியதையடுத்து, அவ்விடத்திற்கு புதிய உறுப்பினராக தங்கராசா ரவீந்திரன் தேர்தல் ஆணையாளரால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இன்றைய தினம் அவர் புதிய உறுப்பினராக பதவி ஏற்கின்றார்.
0 comments :
Post a Comment