கிராமப்புற மாணவர்களினது கடினபந்து கிறிக்கட் துறையினை நகரப்புற மாணவர்களின் தரத்திற்கு அபிவிருத்தி செய்ய ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனம் முன்வந்துள்ளது.



அஸ்ஹர் இப்றாஹிம்-
டகிழக்கு உட்பட நாட்டின் 25 மாவட்டங்களிலுமுள்ள 650 பாடசாலைகளில் கிராமப்புற மாணவர்களினது கடினபந்து கிறிக்கட் துறையினை நகரப்புற மாணவர்களின் தரத்திற்கு அபிவிருத்தி செய்ய ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனம் முன்வந்துள்ளது.
கடினபந்து கிறிக்கட் துறையில் மிகவும் திறமையான கிறிக்கட் வீர்ர்கள் கிராமப்புறங்களில் காணப்படுவதோடு அவர்களுக்கு கிறிக்கட் உபகரணங்களோ முறையான பயிற்சியோ இல்லாமையினால் அவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதனால் அவர்களின் திறமையினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கயிற்றினால் பின்னப்பட்ட 400 தளவிரிப்புகளை பாடசாலைகளுக்கு வழங்க முன்வந்துள்ளது.
ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா தலைமையில் களுத்தறை மாவட்டத்திலிருந்து மேற்படி தளவிரிப்புகள் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஏனைய மாவட்டங்களுக்கு இம்மாதம் முடிவதற்குள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இப் பாடசாலைகளுக்கு கடினபந்து கிறிக்கட் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு , எதிர்வரும் காலங்களில் கொங்கிறீட் பயிற்சித்தளம் , ஆடுகளம் அமத்தும் இரும்பு உருட்டி என்பனவும் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிறிக்கட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :