உலக சாதனை சுட்டி "கிராண்ட் மாஸ்டர்" அனாவுக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத்பாராட்டி கெளரவிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
நிந்தவூரைச் சேர்ந்த சாதனை சுட்டி றணீஸ் பாத்திமா அனா உலக சாதனை படைத்து சர்வதேச சாதனை புத்தகத்தில் தனது பெயரினை பதித்தமைக்கு அண்மையில் அம்பாறை ஆளுனர் அலுவலகத்தில் வைத்து கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் அனுராத ஜஹம்பத் அவர்களினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

நிந்தவூர் அல் மஸ்ஹர் பெண்கள் உயர்தர (தேசிய) பாடசாலையின் முதலாம் தரத்தில் மாணவியான பாத்திமா அனா நிந்தவூர் மீராநகரை சேர்ந்த
றணீஸ், இஷாதா தம்பதிகளின் புதல்வியும் ஆவார்.

இச்சாதனை சுட்டி ஆசிய சாதனை புத்தகத்தில் GRAND MASTER என்னும் மகுடம் சூடிய இலங்கையின் முதலாவது சிறுமியும், அமெரிக்க சாதனை புத்தகத்தில் (World Champion) உலக சாம்பியன் என்னும் பட்டத்தை பெற்றவரும், ஐரோப்பிய சாதனை புத்தகத்தில் பல நாட்டு சிறார்களின் சாதனையை முறியடித்து தன் பெயரிணை பதிந்தவர். என்பதும் குறிப்பிடதக்கதுடன்,

இந்நிகழ்வின் போது அனா தனது சாதனைகளை கௌரவ ஆளுனருக்கும் ஆளுணர் அலுவலக அதிகாரிகளுக்கும் செய்து காட்டி அவர்களால் கேட்கப்பட்ட வினாக்களுக்கு மிக வேகமாக சரியான பதிலை கூறி அனைவரையும் வியப்பூட்டி அனைவரினதும் பாராட்டுக்களையும், கெளரவத்தினையும் பெற்றுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :