நாங்க போற... நீங்க வாறா?



எம்.ஐ முபாறக்-
ந்த "போஸ்டர்" வடிவமைத்தவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட ஒரு கேலிச் சித்திரம் என்னவெல்லாம் செய்யுமோ, அவை அனைத்தைதும் இந்தப் போஸ்டரும் அதில் சொல்லப்பட்டிருக்கும் "பிராந்திய சொற் பிரயோகமும்" செய்து முடித்திருக்கின்றன!
அந்தக் "கலர் கொம்பினேசன்" அச்சு அசல் மு.காவின் ஆதர்சன் நிறப்பிரிகை.
தார்மீக எதிர்ப்பினை வெளிப்படுத்திட மு.கா இவ்வளவு காலம் எடுத்திருக்கத் தேவையில்லை. ஆனாலும் மு.கா எதிர்கொண்டிருக்கும் உள்வீட்டுச் சிக்கல்களுக்கு இந்தக்கூடுகை கண்டிப்பாய் ஏதேனுமொரு பிரதிபலிப்பை கிழக்கில் நிகழ்த்தும்.

மு.காவின் வாக்காளர்கள் யார் என்பதனையும், ஹரீசுக்கும், பைஷால் ஹாசிமுக்கும் வாக்களித்தவர்களிலிருந்து தற்போதைய மு.காவின் ஆதரவாளர்கள் யார் என்பதனையும் புடம்போடப் போகிற ஓர் நிகழ்வகவே இது இருக்கப் போகின்றது.

சென்ற பா.மன்றத் தேர்தலில் தோல்வியுற்ற மு.காவின் வேட்பாளர்களுக்கு சிறந்த முகாந்திரம் இதன் மூலம் ஏற்பட அநேக வாய்ப்புகள் இருக்கின்றன.
அந்த அடிப்படையில் கல்முனைக்குடி, நிந்தவூர் போன்ற ஊர்களிலிருந்து இதற்காய் களமிறங்குபவர்கள் நிச்சையமாக மு.காவின் போராளிகளேதான். அதே நேரம் சாய்ந்தமருதில் இருந்து இதில் பங்குபற்றுபவர்கள் சொற்பமாய் இருந்தாலும் அவர்களும் மு காவிற்காய் மூச்சையும் விடக்கூடியவர்களாய்த்தான் இருப்பார்கள் என்பதில் ஐயப்பாடு ஏதுமிருக்கப் போவதில்லை.

எம்.பி இல்லாத ஓர் ஊரிலிருந்து எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. முதலில் வெடிச்சத்தம் கேட்கும். மான் விழுந்திருக்கிறதா இல்லையா என்பதை "கிழக்கு வாசல்" அடுத்த நாள்தான் அறிய முடியும்.
நாடித்துடிப்பு அறிகிற நாடகம் அல்லது ஹைப்பிரிட் சினிமா எதுவுவாகவும் இது இருக்கலாம். ஆனால் இது சாம பேதமின்றி அனைத்துத் தரப்பும் தங்களின் இருப்பினை வெளிக்கொணருகிற ஒன்றாகத்தான் இது இருக்கப் போகிறது.

தங்களின் தற்போதைய அல்லது அடுத்த கட்ட நிலைப்பாட்டினை முன்கூட்டியே தீர்மானிக்கின்ற திராணி அல்லது ஆற்றல் குறைவாய் உள்ள கிழக்கின் அரசியல் பிரபலங்கள் இதனை பிசிபிசுத்துப் போகச் செய்திட நிச்சயமாக வெளிப்படையாகவும் திரைமறைவினிலும் கருமமாற்றக்கூடும்.
பாவம் மு.காவின் மாநகரசபை உறுப்பினர்கள்!

பொருளாதார நெருக்கடி,வாழ்க்கைச் செலவின் உச்சம்,அத்தியவசிய தேவைகளின் பற்றாக்குறை, எரிவாயுவுக்கும் அங்கருக்கும் போலின், இன்னோரன்ன தற்காலிக எதிர்கொள்ளல் பிரச்சினைகளினால் படுகின்ற இன்னல்களினையும், அதற்கான தீர்வினைக் கேட்கின்ற குடிமகனின் தார்மீக எதிர்ப்பினை வெளிப்படுத்த கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பத்தினையும் பயன்படுத்தல் உசிதமானதாய் இருக்கும் என்றே எதிர்பார்க்கின்றோம்.
அதைவிடுத்து,

ஹக்கீமா,ஹரீஸா, ஹாஸிமா எனப் பரீட்சிக்க இது பொருத்தமற்ற சந்தர்ப்பமும் சூழ்நிலையுமன்று என புரிந்து கொள்வதில் இருக்கின்ற புனைவுச் சேர்க்கைகளையும் இட்டுக்கட்டுகளையும் தவிர்க்குமாறு இத்தால் உங்களை பணிவன்புடன் வேண்டுகிறோம்.
அறம்சார் எதிர்ப்பிற்கு ஏன் வேண்டும் அரசியல் சாயம்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :