மக்களின் கஷ்டங்களை அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது,துவிச்சக்கர வண்டியில் சபை அமர்வுக்கு சென்ற நகர சபை உறுப்பினர்



ரிபொருள் விலை யேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்ணியா நகர சபையின் 48 அமர்விற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியை சேர்ந்த கிண்ணியா நகர சபை உறுப்பினர் முஸ்தபா நஸ்ருதீன் துவிச்சக்கர வண்டியில் நேற்று (29) சபை அமர்வுக்கு சென்றார். பொருட்களின் விலையேற்றத்தால் மக்களின் வாழ்க்கையை வதைக்காதே,எரிபொருள் எரிவாயு அத்தியவசிய பொருட்களின் விலையேற்றத்தை உடன் நிறுத்து போன்ற வாசகங்களை துவிச்சக்கர வண்டியில் பதாகையை ஏந்தியவாறு சபைக்கு சென்றார்.

அத்தோடு சபை அமர்விலும் எரிபொருள் எரிவாயு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் தொடர்ந்தேர்ச்சியான விலையேற்றத்தை எதிர்த்து பிரேரனை ஒன்றினை யும் முன் வைத்ததுடன் ஊடகங்களுக்கு பின்னர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற தொடர் விலை ஏற்றம் பொருட்களின் தட்டுப்பாடு அத்தனை தரப்பு மக்களையும் அதாளபாதாளத்துக்கு தள்ளியுள்ளது. மக்களின் கஷ்டங்களை அரசாங்கம் அறிக்கைவிட்டு வேடிக்கை பார்க்கின்றது இவ்வாறான நிலைமை மாற வேண்டும் .மக்களின் கல்வி வைத்தியத் துறை என்பன பாதிக்கப்பட்டு நாட்டை விட்டும் வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளதுடன். பொருட் கொள்வனவிற்காக வரிசையில் மக்கள் காத்திருக்கின்ற நிலையில் உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை அரசாங்கம் வெளியிடுகிறது இவ்வாறான நிலையை மாற்றி மக்களுடைய வாழ்க்கையில் சாதகமான தீர்வினை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :