கிழக்கின் கேடயம் முன்மொழிந்துள்ள முஸ்லிம் சர்வ கட்சி மாநாடு காலத்தின் தேவை : அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளோம் - எம்.ரீ.ஹசன் அலி



நூருல் ஹுதா உமர்-
ர்வ முஸ்லிம் கட்சி மாநாடு காலத்தின் தேவை. இதுதொடர்பில் பத்திரிகைகள் மூலம் எனக்கு வாசிக்க கிடைத்தது. கிழக்கின் கேடயம் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மிகவும் பெறுமதியானது இதனோடு இன்னும் பல விடயங்களை சேர்த்துக்கொள்ளவேண்டிய தேவை இருக்கிறது.

இப்பணிக்கு எல்லோருடனும் இணைந்து சாதாரண ஒரு தொண்டனாக அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸ் உடனான சந்திப்பில் ஐக்கிய மக்கள் சமாதான முன்னணியின் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹசன் அலி இவ்வாறு தெரிவித்தார்.

இச்சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த எம்.ரீ.ஹசன் அலி, விரைவில் கட்சியின் உயர்மட்ட குழுவிடம் கலந்தாலோசித்து இதுதொடர்பான எங்கள் கட்சியின் ஊடக அறிக்கையினையும் வெளியிட தயாராக உள்ளோம். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் பெரும்பான்மை கட்சிகள் மத்தியில் சரிந்து கிடக்கும் தன்னுடைய செல்வாக்கை மீளக்கட்டமைக்கும் சந்தர்ப்பாக ஏப்ரல் முதலாம் திகதி பேரணியை பயன்படுத்த பார்க்கின்றார். மேலும் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் முன் மொழியப்பட்ட கரையோர மாவட்டம், தென்கிழக்கு அலகு போன்றவற்றைப் பெறுவதற்கு 22 வருடங்கள் எதுவுமே செய்யாத ஹக்கீம் இன்னும் ஏதாவது சமூகத்திற்கு செய்வார் என்பதை நம்பலாமா? என கேட்டார்.

முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆவணங்களை தயார் செய்ய முஸ்லிம் சர்வகட்சி மாநாட்டினை கூட்டுமாறு முஸ்லிம்கட்சிகளுக்கு கிழக்கின் கேடயம் அமைப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை தொடர்ந்து அவர்களை எஸ் எம் சபீஸ் அவர்கள் நேரில் சந்தித்த கிழக்கின் கேடயத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் அளித்தார். அதன்போதே முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரீ. ஹசன் அலி மேற்கூறியவாறு கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :