அம்பாரை மாவட்டம் பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஐ.முகம்மட் றியால் அவர்களினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட 'ஏழாவது கிரகத்தில் ஆன்மாவின் சொர்க்கம்' எனும் புத்தக வெளியீட்டு விழா தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் கேட்போர் கூடத்தில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் ஆங்கில மொழித்துறைத் தலைவர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் (23) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸீல் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன், பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி யூ.எல்.அப்துல் மஜீட், வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ். சபீனா எம்.ஜீ.ஹஸன், கலை, கலாசார பீடத்தின் சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி எஸ்.அனுசியா, நூலகத்தின் சிரேஷ்ட உதவி நூலகர்களான கலாநிதி எம்.எம்.மஸ்றூபா, எம்.ஏ.சி.எம்.அஸ்வர், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.எம்.வாஸீத் உட்பட கவிஞர்கள் , எழுத்தாளர்கள், ஆர்வாளர்கள், மாணவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment