தூய குடிநீர்த்திட்டம் நினைவுபடுத்தப்பட வேண்டியவர்கள் யார்?



எம்.என்.எம்.யஸீர் அறபாத் - ஓட்டமாவடி-
ன்று கல்குடாத்தொகுதியில் கணிசமான பிரதேசங்களில் தூய குடிநீரைப்பெறக்கூடிய பெரும் பாக்கியத்தையும் வாய்ப்புக்களையும் நாம் பெற்றுள்ளோம்.
நீண்ட காலமாக கானல் நீராக இருந்த தூய குடிநீர் அபிலாஷை நல்லாட்சிக் காலத்தில் நகரத்திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் அமைச்சைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் கல்குடா சூறா சபையின் உறுப்பினர்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்து கல்குடாத்தொகுதிக்கான தூய குடிநீர்த் திட்டத்தைக் கோரினார்கள். அதனைத்தொடர்ந்து அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் தற்காலிகமாக ஓட்டமாவடி பிரதான வீதிக்கு அருகாமையில் குழாய் பதிக்கும் திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இதன் பின்னர் இத்திட்டத்தை தனது கையிலெடுத்து பல பிரதேசங்களுக்கும் கொண்டு செல்வதில் அதிக முனைப்புக் காட்டியவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அன்றைய கல்குடாத்தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் திகழ்கிறார்.
போத்தலில் கூட இவர்களால் குடிநீரைக் கொண்டு வர முடியாதென ஏளனப் பேச்சுக்கள் மற்றும் பல்வேறு விமர்சனங்கள் அன்றைய காலகட்டத்தில் இத்திட்டத்திற்கெதிராக முன்வைக்கப்பட்ட போதும், இந்த விமர்சனங்களையெல்லாம் தகர்த்தெறிந்து, இந்த விமர்சனங்களுக்கு அஞ்சாது, தனக்கு வாக்களித்த மக்களின் நீண்ட நாள் தாகம் தீர்க்க அமைச்சர் ரவூப் ஹக்கீமூடாக கட்டங்கட்டமாக குடிநீரைக் கொண்டு வருவதில் முயற்சி செய்து வெற்றியும் கண்டார். பல பிரதேசங்களுக்கு இவர்களின் காலப்பகுதியிலேயே குடிநீர்க்குழாய்கள் பதிக்கப்பட்டு நீரிணைப்புகளும் வழங்கப்பட்டது.
கல்குடாத்தொகுதி முழுவதற்குமான பாரிய நீர் வழங்கல் திட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியை தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்து முன்னெடுத்திருந்தார். ஆனால், ஆட்சிக்குழப்பம், ஆட்சி மாற்றம் என்பவை காரணமாக பாரிய நீர் வழங்கல் திட்டம் தடைப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று நீரிணைப்புப் பெறுவதில் விடுபட்ட கவத்தமுனை, நாவலடிப் பிரதேசங்களுக்கான குடிநீரிணைப்பைப் பெற்றுக்கொடுப்பதில் தற்போதைய கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.நௌபர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
எனவே, இவ்விடயத்தில் முதலில் அல்லாஹ்வைப் புகழ்ந்தவர்களாக (அல்ஹம்துலில்லாஹ்) நினைவுபடுத்தி பாராட்டப்படவேண்டியவர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அன்று அயராதுழைத்த எச்.எம்.எம்.றியாழ், கல்குடா சூறா சபை தற்போதைய கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.நௌபர், சபை உறுப்பினர்கள் அத்துடன், இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச்சபை உத்தியோகத்தர்கள், இவ்விடயத்தில் அதிக கரிசணை கொண்டு ஒத்துழைத்த பிரதேச முக்கியஸ்தர்கள் காணப்படுகிறார்கள்.
அனைவருக்கும் சமூகம் சார்ந்த பாராட்டுக்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :