சம்மாந்துறை பிரதேசசபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் வை.எம்.முஸம்மில் தனது உறுப்பினர் பதவியிலிருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்புரிமை மற்றும் அமைப்பாளர் பதவியிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளார்.
இராஜினாமாவுக்கான கடிதங்கள் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர, தேர்தல் ஆணையாளர் ,அம்பாறை மாவட்ட உதவிதேர்தல்ஆணையாளர் ,தவிசாளர் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
திடீர் இராஜினாமாவுக்கான காரணம் என்ன என வினவியபோது 'சமகால அரசாங்கம் பொதுமக்கள் மீது வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாரிய சுமையை சுமத்தி கையறு நிலையிலிருப்பதால் மக்களுக்காக எனது சகல பதவிகளையும் இராஜினாமாவை செய்தேன்' என்று அவர் கூறினார்.
சம்மாந்துறையில் உறுதியான தரமான தவிசாளரை உருவாக்கவேண்டுமென்பதற்காக கட்சி அரசியலுக்கு அப்பால் நான் தற்போதைய தவிசாளர் நௌசாட் அவர்களை தவிசாளராக்கினேன். அவருக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கினேன்.என்றார்.
மேலும் ,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சமகாலபோக்கு சிறுபான்மையினரை கிள்ளுக்கீரையாக பயன்படுத்தி அதிகாரமில்லாத உள்ளுர் அமைப்பாளர்களிடம் மண்டியிடவைத்து காலத்தை இழுத்தடிப்பதாகவே உள்ளது.இதில் இன்னமும் இருந்து மக்களுக்கு சேவைசெய்யலாமென எதிர்பார்க்கமுடியாது.எனவே எனது உறுப்புரிமை பதவி அனைத்தையும் இராஜினாமாச்செய்கிறேன் என்றார்.
0 comments :
Post a Comment