நிந்தவூர் அல்- ஹிக்மா பாலர் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்தார் தவிசாளர்



நூருள் ஹுதா உமர்-
நிந்தவூர் பிரதேச சபையின் பராமரிப்பின் கீழுள்ள அல்- ஹிக்மா பாலர் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான கல்விசார் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் வித்தியாரம்ப விழா இன்று (03) நடைபெற்றது.

நிந்தவூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் கலந்து கொண்டதுடன், விஷேட அதிதிகளாக கல்முனை கல்வி வலய முன்பள்ளி கல்வி கள உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மது அனீஸ், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் ஆரம்ப குழந்தைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல். முஹம்மது ஹப்ரத், நிந்தவூர் பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

25 ற்கும் மேற்பட்ட புதிய மாணவர்களை மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் அவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் மற்றும் கலந்து கொண்ட பிரமுகர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த பாலர் பாடசாலைக்கான நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் உள்ளுராட்சி மன்றங்களின் உள்ளூர் மேம்பாட்டு (Local Development Support Project- LDSP) திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்டு கடந்த 22.02.2022 அன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆனையாளர் என். மணிவண்ணன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :