இன்று பங்குனி உத்தர சமுத்திர தீர்த்தம்



காரைதீவு சகா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தரத்திருவிழாவின் இறுதிநாள் சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று(18)வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கிறது.
கொரோனா காரணமாக 2வருடங்களின் பின்பு நேற்றுமுன்தினம்(16) இரவு அம்பாள் முத்துச்சப்பறத்தில் எழுந்தருளி பாரம்பரிய கலை கலாசார பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் விநாயகப்பெருமான் முருகப்பெருமான் சகிதம் கிராமத்தில் தேரோடும் வீதிவழியாக வீதியுலா வந்தார்.
ஆண்களும் பெண்களும் வடம்பிடித்து தேர் இழுத்து வெளிவீதியுலா வருவது கண்கொள்ளாக்காட்சியாக அமைந்தது
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் திருவிழாப்பூஜைகளை கடந்த 9தினங்களாக சிறப்பாக நடாத்த தினமும் நற்சிந்தனை சொற்பொழிவு உள்வீதி வெளிவீதி தேருர்வலம் என்று பல சிறப்புகளுடன் திருவிழா இடம்பெற்றுவந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :