சாய்ந்தமருதில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருதில் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வு (08) சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா தலைமையில், கலாசார பிரிவு மற்றும் சிறுவர், மகளிர் அபிவிருத்தி பிரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் எம்.ஐ.எஸ். சபீனா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம். ஆயிஷா சித்தீக்கா, பிரதேச சபையின் கணக்காளர் நுஸ்ரத் பானூ, கவிதாயினி, கவிப்பேரரசி ரிஹானா அனார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
சமய அனுஷ்டானத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், கிராஅத் ஐ.எப்.அகிலா, மொழிபெயர்ப்பை எஸ்.பவாஸ் ரொஸ்னியும் வழங்கினர்.

உலகத்தில் உயிர் நீத்த பெண்மணிகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, வரவேற்புரையை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகா, தலைமையுரையை உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, மகளிர் தின உரையை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.நஸ்லா ஆகியோரும் நிகழ்த்தினர்.

சுகைல் அஸீஸ், எல். ஜி.எம். மர்யம் ஆகியோர் கவிதை சொன்னதோடு, எம்.ஐ.சஜினாஸ் பாடலொன்றையும் பாடினார்.

இதன்போது நவீன சமூக வலைத்தளங்களினால் பெண்களுக்கு ஏற்படும் தாக்கம் நன்மையா? அல்லது தீமையா? என்ற தலைப்பில் விவாத மேடையொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் நன்மை என்ற அணியில் எல்.ஜி.எம்.மும்தாஜ் (தலைவர்), எம்.என்.எப்.சுமையா, ஏ.பி.தீசான், எம்.என்.எப்.எம்.சினாபி ஆகியோரும் தீமை என்ற அணியில் ஏ.ஆர்.எப்.சியானா (தலைவர்), ஏ.நபீலா, ஏ.சபானா, ஏ.எஸ்.எப்.சுமையா ஆகியோர் பங்கேற்று காத்திரமான கருத்துக்களை முன்வைத்தனர்.

இதில் நவீன சமூக வலைத்தளங்களினால் பெண்களுக்கு ஏற்படும் தாக்கம் தீமையே என்ற சார்பில் சிறந்த முறையில் கருத்துக்களை முன்வைத்து, விவாதித்த அணியினர் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.

போட்டியின் நடுவர்களாக கல்முனை மாநகரசபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம். ஆயிஷா சித்தீக்கா, கவிதாயினி ரிஹானா அனார் ஆகியோர் கடமையாற்றினர்.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் எம்.ஐ.எஸ். சபீனா, பேராசிரியராகப் பதவியுயர்வு கிடைத்தமைக்காக சபையோரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். அத்தோடு, சாய்ந்தமருதில் சிறந்த முறையில் பங்காற்றி, செயலாற்றிவரும் மகளிர் சங்கங்களின் தலைவிகள் மற்றும் சிறப்பாக சேவையாற்றிவரும் சாய்ந்தமருது கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.பி.நஸ்லா, எம்.ஏ.சக்கீனா ஆகியோருக்கு விருதி வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், கலாசார உத்தியோகத்தர் சுரேஷ் குமார், நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். நளீர் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பணிபுரியும் அனைத்து பெண் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :