யூத் அலியன்ஸ் ஶ்ரீ-லங்கா அமைப்பின் 5வது ஆண்டு வருடாந்த பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை ( 18 ) சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் அமைப்பின் ஸ்தாபக தலைவர் இஷட்.எம் ஸாஜீத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு முன்னால் முன்னாள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் அமைப்பின் மூத்த ஆலோசகருமான முஹம்ட் சாதாத், முன்னாள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிரேஷ்ட உதவிப் பணிப்பாளாரும் மற்றும் முன்னால் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் பொறுப்பதிகாரியும் அமைப்பின் மூத்த ஆலோசகருமான எஸ்.எம்.ஏ லத்தீப் அமைப்பின் நிர்வாக உறுப்பினர்கள், அங்கத்தவர்கள் ,ஜீனியஸ்7 விருதுப் பிரிவின் உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
அத்துடன் அமைப்பின் 2022 ஆண்டுக்கான நிர்வாக தெரிவும் இடம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment