கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன் காரைதீவு பிரதேசசபைக்கு அதிர்ச்சி விஜயமொன்றை நேற்றுமுன்தினம் மேற்கொண்டார்.
சபை நிருவாக நடவடிக்கைகளை நேரடியாக அறிந்து கொண்ட அவர் சபைத்தவிசாளர் கே.ஜெயசிறிலுடன் கலந்துரையாடினார்.
அவருடன் அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் கமல்நெத்மினியும் சமுகமளித்திருந்தார்.
பணிமனையை அவதானித்துவிட்டு அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுவரும் காரைதீவு கலாசார மண்டப மேல்தள கட்டுமானப்பணிகளை நேரில்சென்று பார்வையிட்டார்.
ஈற்றில் சபை நடவடிக்கைகளில் கண்டறிந்த விடயங்கள் பற்றி கலந்துரையாடி மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் மாற்றங்கள் பற்றி அறிவுறுத்தினார்.
0 comments :
Post a Comment