2021 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஒரு வகுப்பிலிருந்து அதி கூடுதலாக 16 மாணவர்களை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறச்செய்து பாடசாலை மட்ட சாதனையை ஏற்படுத்தியுள்ள ஆசிரியர் முஹம்மட் அஸ்வர் பாடசாலை அதிபர் யு.எல்.நஸார் உட்ட கல்வி சமூகத்தால் கடந்த வெள்ளிக்கிழமை ( 18 ) பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இது 109 வருட வரலாற்றினைக்கொண்ட இப்பாடசாலையின் சாதனையாக பதிவுசெய்யப்படுகிறது...
மாணவர் கல்விக்கு ஒளியூட்ட தன்னை மெழுகுவர்த்தியாய் உருக்கி அர்ப்பணித்து தியாகங்கள் செய்த இந்த ஆசிரியர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர்
0 comments :
Post a Comment