உலக சிறுநீரக தினத்தையொட்டி சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக சிறுநீரக தினத்தை நினைவு கூறும் முகமாக விழிப்புணர்வுக் கருத்தரங்கும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சனூஸ் காரியப்பர் தலைமையில் இன்று காலை ( 10 ) இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிகிச்சைக்காக வருகை தந்தோருக்கு நீர் அருந்துவதை ஊக்குவிக்கும் முகமாக அனைவருக்கும் சுத்தமான குடிநீர் போத்தல்கள் வழங்கப்பட்டு அனைவரும் அவ்விடத்திலேயே முற்றாக அருந்துமாறு பணிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிகழ்வில் வைத்தியசாலை வைத்தியர்கள் , தாதி உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment