எல்லே புகையிரத நிலையத்திலிருந்து நுவரெலியா செல்வதற்கு கொழும்பு புகையிரதத்தில் நானுஓயா பயணித்த ஜேர்மன் நாட்டு உல்லாசப் பிரயாணி ஒருவரின் மடிகணிணி உட்பட பயணப் பொதி புகையிரத்தில் தவறி விடப்பட்டிருந்த்து..
கடந்த புதன்கிழமை ( 16 ) இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது , உல்லாசப் பிரயாணி நுவரெலியாவில் தான் தங்கும் ஹோட்டலில் தமது குழுவினருடன் தங்குவதற்கு ஆயத்தமானபோது தனது நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான மடிகணிணியும் , பயணப்பொதியும் புகையிரதத்தில் தவறியுள்ளமை தெரிய வந்தது.
உடனடியாக ஹோட்டல் ஊழியர் ஒருவரது உதவியோடு கண்டி சுற்றுலா பொலிஸாருக்கு அறிவித்ததனை தொடர்ந்து பொலிஸார் நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிபருக்கு இவ்விடயத்தை தெரியப்படுத்தினர்.
நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிபர் நாவலப்பிட்டி புகையிரத நிவையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத்தினுள் சோதனையிட்ட போது உல்லாசப் பிரயாணி தொலைத்த அவரது உடமைகள் கண்டு பிடிக்கப்பட்டு உரியவரான ஜேர்மன் நாட்டு பிரஜையான டேவிட் பென்ஜமினிடம் ஒப்படைக்கப்பட்டது
0 comments :
Post a Comment