நற்பிட்முனை விளையாட்டுக் கழகம் நடாத்தும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கடின பந்து கிறிக்கட் அணிகள் பங்கேற்கும் 20 ஓவர்கள் மட்டுப்படுத்தபட்ட கிறிக்கட் சுற்றுத் தொடரில் கல்முனை ஹரிகன்ஸ் விளையாட்டுக்கழகம் அறையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
நற்பிட்டிமுனை எம்.எச்.எம்.அஸ்றப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இன்று ( 20 ) கல்லாறு சென்ரல் விளையாட்டுக் கழகத்திற்கும் கல்முனை ஹரிகன்ஸ் விளையாட்டுக் கழகத்திற்குமடையிலான போட்டி இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை ஹரிகன்ஸ் விளையாட்டுக் கழகம் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்த்து.
முதலில் துடுப்பெடுத்தாடிய கல்லாறு சென்றல் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய கல்முனை ஹரிகன்ஸ் விளையாட்டு கழகம் 18.2 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ( 22 ) சாய்ந்தமருது பைன் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துடன் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ளது.
இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக கல்முனை ஹரிகன்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எம்.ஏ.பர்ஸாத் தெரிவு செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment