பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் ஓ.எம்.ஏ.சலாம் அறிக்கை !!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அகில இந்திய தலைவர் ஒ.எம்.ஏ. சலாம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜகவின் வெற்றி, பாஜகவால் மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான மதவாத அணிதிரட்டலின் விளைவாகும் என்று கூறியுள்ளார். பா.ஜ.க வழக்கம் போல் வாக்கு வங்கியை கவர வகுப்புவாதத்தையே பெரிதும் நம்பியிருந்தது. இதன் மூலம் தேர்தல்களின் போது விவாதத்திற்கு வந்த வாழ்வாதார பிரச்சனைகள் மற்றும் பிரச்சனை அடிப்படையிலான அரசியலை முட்டி மோதி தள்ளி விட்டு வெற்றி பெற்றுள்ளது.
வாக்காளர்களின் மனதை வகுப்புமயமாக்கி, சிறுபான்மை மதங்களைக் குறிவைத்து வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்தியதன் மூலம் தவறான நிர்வாகம் மற்றும் முக்கிய வளர்ச்சிப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை பாஜக திசை திருப்பியது என்றும் ஸலாம் கூறியுள்ளார்.
விவசாயிகளின் போராட்டம் கோபத்தின் அலையாக மாறிய மாநிலத்திலும் அங்கு உள்ள தொகுதிகளிலும் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி இதற்கு சான்றாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதச்சார்பற்ற கட்சிகள் இந்துத்துவ தேர்தல் வியூகங்களுக்கு முன் இன்னும் தெளிவற்று கையறு நிலையில் நிற்கின்றன. மேலும் மென்மையான இந்துத்துவாவையும், மதச்சார்பின்மை பற்றிய அரைகுறையான கருத்துக்களையுமே நம்பியுள்ளன. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்ட மதச்சார்பற்ற உயர் மாண்புகளை நிலைநிறுத்தும் உத்திகள் மற்றும் பரந்த அடிப்படையிலான கூட்டணிகளே காலத்தின் தேவையே வெளியே பூசி மொழுகும் நடவடிக்கைகள் அல்ல. மதவாத ஒன்று குவித்தல், வெறுப்பு மற்றும் இனப்படுகொலைக்கான அழைப்புகள் நாட்டில் நமது இருப்புக்கே கடுமையான அச்சுறுத்தலாக மாறி இருக்கும் சூழ்நிலையின் தீவிரத்தை மதிப்பீடு செய்வதிலும், சரிசெய்வதிலும் அவர்கள் தவறிவிட்டனர்.
இந்த மதச்சார்பற்ற கட்சிகள் இப்போது தங்களை சுயபரிசோதனை செய்து, தங்கள் தோல்வியில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். மதசார்பின்மை குறித்து அவர்களின் புரிதல் மற்றும் அணுகுமுறையில் ஒரு அடிப்படை மாற்றத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும். இந்துத்துவவாதிகளின் தாக்குதலில் இருந்து நமது நாட்டையும் அதன் அரசியலமைப்பு விழுமியங்களையும் காப்பாற்றுவதற்கு குறைந்தபட்சம் இந்த சூழலிலாவது அர்த்தமுள்ள நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்
0 comments :
Post a Comment