பெரியநீலாவணை அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் நிருவாகமும், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிருவாகமும் இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வு இன்று(29-03-2022) அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.றகுமானின் வழிகாட்டலில் சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.ஆர்.எம்.ஹாரீஸின் அனுசரனையில் நடைபெற்றது.
அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் ஐ.எம்.பாறூக் தலைமையில் இடம்பெற்ற இந்த இரத்ததான நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிக்குப் பொறுப்பான டொக்டர் கே.வித்தியா,தாதி உத்தியோகத்தர் யு.எம்.ஏ.ஜின்னாஹ்.அஷ்ஷெய்க் எம்.ஐ.ஜிபான் ஆகியோருடன் ஏனைய தாதி உத்தியோகத்தர்களும்,பள்ளிவாசல் நிருவாகிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment