கல்முனை ஆதார வைத்தியசாலையில் நீண்ட காலமாக தனது மருத்துவ சேவையை செய்து தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்லும் கதிரியக்கவியல் வைத்திய நிபுணர் டாக்டர் என்.நிமோஜனுக்கான பிரியாவிடை நிகழ்வு நடாத்தப்பட்டது.
இப் பிரியாவிடை நிகழ்வு வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி இரா.முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வைத்தியசாலையின் அனைத்து வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் மற்றும் சக ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் அவர் ஆற்றிய சேவைகளும் அந்நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டதுடன் ஏனையவர்களும் அவருடன் இணைந்து சேவையாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அவரை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னம் வைத்திய அத்தியட்சகரினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment