கல்முனை ஸாஹிறா தேசியக் கல்லூரியின் பிரதி அதிபராக சேவையாற்றி தடம் பதித்த எம்.எம்.எம். நிசார்டீன் ஓய்வு பெற்றுச் சென்றதை கௌரவிக்கும் நிகழ்வு " சாதனை மாண்புகளை கொண்டாடுவோம்" என்ற தலைப்பில் பாடசாலையின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
சுமார் 30 வருடகால தனது சேவைக்காலத்தில் 9 வருடங்கள் பிரதி அதிபராக சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலைலை) மற்றும் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையிலும் சிறந்த முறையில் சேவையாற்றி பல சாதனைகளைப் படைத்தவர் இவராவார்.
ஆசிரியர் எம்.எம்.எம். நிசார்தீன் அவர்களின் சேவையை அதிபர் முகாமைத்துவக் குழுவினர், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் உட்டபட அனைவரும் பாராட்டி கௌரவித்தனர்.
0 comments :
Post a Comment