இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் Pro Knights Chess Academy சார்பாக பங்குபற்றி சாய்ந்தமருது நெளஸாத் முஹம்மட் பாதிஹ் தேசிய போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெற்றார்.
இலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய இப் போட்டித்தொடர் அம்பாறை மாவட்டத்தை மையப்படுத்தி அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இப்போட்டிகள் 5 சுற்றுக்களைக்கொண்டதாக அமைந்திருந்ததுடன் 12 வயதுக்கு உட்பட்ட பல போட்டியாளர்கள் விளையாடினர். இதில் சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தில் தரம் 2 இல் கல்விகற்கும் மாணவன் நெளஸாத் முஹம்மட் பாதிஹ் தனது வயது பிரிவில் வெற்றி பெற்று அடுத்த சுற்றான தேசிய போட்டியில் விளையாட தெரிவாகி அம்பாறை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
12 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவுக்கான போட்டியில் வெற்றிபெற்று அம்பாறை மாவட்டத்தில், சிறிய வயதை சேர்ந்த ஒரு போட்டியாளர் தேசிய போட்டியில் விளையாடும் வாய்ப்பினை பெறும் முதல் சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment