பள்ளிவாசலுக்கு நல்வரவு எனும் திட்டத்தின் கீழ் நேற்று 17 புதன் கிழமை கொள்ளுப்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலுக்கு 100 க்கும் இடைப்பட்ட பல்லின சமூகத்தினா்களும் கிரிஸ்த்துவ மத பாரதியாா்களும் வருகை தந்தனா். இந் நிகழ்வினை வெள்ளவத்தை உள்ள இஸ்லாமிய கற்கை மத்திய இன ஜக்கியத்தினை ஏற்படுத்தும் நிறுவனம் 10வது தடவையாக இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இந் நிகழ்வுகள் இஸ்லாமிய கற்கை நிலையத்தின் தலைவா் எம். இல்யாஸ், உப தலைவா் அசீப் ஹூசைன், மௌலவி மூனிா் முல்பாா் ஆகியோா்கள் இணைந்து பள்ளிவாசல் உள் நிர்மாணம், அங்கு முஸ்லிம்களது தொழுகை முறைகள், வுலு, செய்யும் முறை அரபு எழுத்தனிகள் அல்-குர்ஆன் விளக்கங்கள் முஸ்லிம்களது உணவு முறைகள், மருதோண்டிக் கலைகள் போன்ற பல்வேறு கலாச்சார பழக்க வழக்க முறைகளை பல்லின சமுகத்தினா்களுக்கு அங்கு விளக்கம் அளிக்கப்பட்டது அத்துடன் அங்கு வருகை தந்தவா்களது சந்தேகங்களுக்கு விளக்கவுரைகளும் செயல்முறைகளையும் காண்பிக்கப்பட்டது.
அங்கு வருகை தந்தவா்கள் விளக்கமளிக்கையில் நாங்கள் இன்று தான் வாழ்நாளில் முதல் முறையாக பள்ளிவாசல் ஒன்றுக்கு வருகை தந்து முஸ்லிம்களது மத வழிபாடுகள் பல சந்தேகங்களை தெளிவுகண்டதாகவும் பல மத வழிபாடுகளை தெரிந்து கொண்டதாகவும் தெரிவிததனா். இவ்வாறு எதிர்கால்தில் ஏனைய சமுத்தினர்களுக்கும் நாட்டில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களுக்கும் இவவாறு வரவழைத்து பல சந்தேகங்களை தெரிந்து கொள்ளவும் இத்திட்டத்தினால் பல்லின மக்கள் வாழும் நாட்டில் இன ஜக்கியத்தினை ஏற்பட இத் திட்டம் சிறந்ததொன்றாகும் எனக் கருத்துத்க்களைத் தெரிவித்தாா்கள்.
0 comments :
Post a Comment