எமது நாட்டைப் பொருத்தவரையில் மிக அதிகமான பெண்கள் ஆசிரியர் தொழில் மற்றும் இலிகிதர், நிருவாக உதவியாளர் போன்ற பல தொழில்களில் இருந்தாலும் குறைவான பெண்களே உயர் பதவிகளை வகிக்கின்றவர்களாக காணப்படுகின்றனர் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
பல வருடங்களாக நிருவாகத்திறமையை செய்துவருகின்ற பெண் அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு (24) திருகோணமலை ஜூப்லி மண்டபத்தில் ஹலோ எப்.எம் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி எப்.எம்.சரீக் தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பல குடும்ப சுமைகளுக்கப்பால் தங்களின் அரச நிருவாகக் கடமைகளை பம்பரம்போல் செய்துவருகின்ற நிருவாகத் திறமையுள்ளவர்களை பாராட்டி கௌரவிப்பது குறைவாக இருந்தாலும், அதனை கருத்திற்கொள்ளாமல் தங்களின் கடமைகளை சரிவர செய்துவருகின்றவர்களாகவே பெண்கள் காணப்படுகின்றனர்.
ஆரம்ப மற்றும் இரண்டாம் மூன்றாம் கல்விநிலைகளை பூர்த்திசெய்யும் பெண்களின் சதவீதமும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகி உயர்கல்வியை பூர்த்திசெய்யும் பெண்களின் வீதமும் இன்று அதிகரித்துச் செல்கின்றது. மூன்றாம் நிலைக்கல்வியில் மிகச்சிறந்த பெறுபேறுகளையும் அடைவுகளையும் பெற்றும் தமது திறமைகளை வெளிக்கொணவர்வதிலும் உயர் பதவிகளை அடைவதிலும் அதிக அக்கரை காட்டுபவர்களாகவும் இன்று காணக்கூடியதாக உள்ளது என்றார்.
கிழக்கு மாகாண அமைச்சு, திணைக்களம், அரச மற்றும் அரச சார்பற்ற நிருவனங்களில் நிருவாகத் திறமையை செய்துவருகின்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முதரளிதரன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர், கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (ஆளணி மற்றும் தொழிற்பயிற்சி) திருமதி ஆர்.யூ. ஜலீல், மாகாண கிராமிய தொழிற்துறை திணைக்கள மாகாண பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமார், மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு திணைக்கள மாகாண ஆணையாளர் ஆர்.றிஸ்வானி, மாகாண மோட்டார் போக்குவரத்தி திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி ஆர்.வளர்மதி, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள நிருவாக உத்தியோகத்தர் திருமதி சிவவதனா நவேந்திரராஜா உள்ளிட்ட பலர் இதில் கௌரவிக்கப்பட்டனர்.
0 comments :
Post a Comment