முஸ்லிம்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள வழிவகையின்றி நெருக்குவாரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் - ஹாபிஸ் நசீர் அஹமட்


நூருல் ஹுதா உமர்,சாதிக் அகமட்-
வ்வாண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் நெறிப்படுத்தலில்
இடம்பெற்றது.

ஏறாவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ். நளீம், நகர, பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாசர், ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ. தஸ்லிம், திணைக்கள, கூட்டுத்தாபனத் தலைவர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக் கூட்டத்தில் நடப்பாண்டில் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் பின்னடைவுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டன.

அங்கு நிகழ்வைத் துவக்கி வைத்து உரையாற்றிய பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகள் எதிர்கொள்ளும் பிரச்சினை கரிசனைக்குரியது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 26 சதவீத முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் 4 பிரதேச செயலகங்கள் முஸ்லிம்களுக்காக உள்ளன. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மொத்தக் காணிகளில் 1.54 வீதக் காணிகள் மாத்திரமே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால் முஸ்லிம்கள் வாழ்விடத்தை அமைத்துக் கொள்ள வழிவகையின்றியும் உட்கட்டமைப்புக்களை மேற்கொள்ள முடியாமலும் நெருக்குவாரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்- என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :