சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்திக் கொண்டிருக்கும் 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் காரைதீவு விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழகம் 8 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் இன்று ( 14 ) நடைபெற்ற 61 வது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காரைதீவு விளையாட்டு கழகம் முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய காரைதீவு விளையாட்டு கழகம் 15 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழகம் 12 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியின் சிநப்பாட்டக்கார்ராக சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்தைச் சேரந்த யு.எல்.றில்வான் தெரிவு நெய்யப்பட்டார்.
இவர் துடுப்பாட்டத்தில்ல் 28 ஓட்டங்கரளப் பெற்றதுடன் , பந்து வீச்சில் மூன்று ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இப்போட்டிக்கு ஓய்வுபெற்ற சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன பிறை எப்.எம்.அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம்.நௌபீல் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இப்போட்டிக்கு நடுவர்களாக ஏ.எம்.பாஹிர் மற்றும் ரி.கே.எம்.ஜலீல் ஆகியோர் கடமையாற்றினார்கள்
0 comments :
Post a Comment