மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைப்பு !



எம்.என்.எம் அப்ராஸ்-
ர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தினால் உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவம் தாங்கும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் இன்று (08)கல்முனை பொலிஸ் நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் அவர்களின்
ஒருங்கிணைப்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது உலரணவு பொருட்களை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ரம்ஷீன் பக்கீர்,சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ வாஹிட் உட்பட பொலிசார் இணைந்து உலரணவு பொருட்களை மேற் குறித்த பெண் தலைமைத்துக்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :