மலேசியாவிலுள்ள மதீனா சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் கலாநிதி (MIUM) பட்டம் பெற்ற எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனியை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (17) இடபெற்றது.
ஓட்டமாவடி - தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் முதல்வரான இவர், தனது கலைமாணி பட்டத்தை மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலும் முதுமாணிப் பட்டத்தை கண்டி பேராதெனிய பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.
தற்போது காலாநிதி பட்டம் பெற்றுள்ள இவரை கௌரவிக்கும் நிகழ்வு
தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் வீ.ரீ.எம்.முஸ்தபா (தப்லீகி) தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அதிதிகளாக மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாரக் மதனி, வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத் ஸஹ்வி மற்றும் உலமாக்கள், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment