குருநாகலையில் 1946 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட ”வெடிங் றிங் ஜெம் ஜூவலரி அதன் வியாபாரத்தில் மேலும் அபிவிருத்தி கண்டு 4வது கிளையை பம்பலப்பிட்டியில் இல 517 காலிவீதியில் கட்டிடத்தில் 22.03.2022 கோலகாலமாகத் திற்ந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு ரெயின்கோ கம்பனியின் தலைவா் எம். பௌஸ் ஹாஜி பிரதம அதிதியாகவும் தேவி ஜவலா்ஸ் உரிமையாளா் வாசு அவா்களும் இனைந்து திறந்து வைத்தனா். வெடிங்றிங் நகை மற்றும் ஜெம் தனியாா் லிமிட்டெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளா் ரியாஸ் மீரா தலைமையில் இந் நிகழ்வுகள் நடைபெற்றது
இத்துறை சம்பந்தமான ரியாஸ் மீரா கருத்து தெரிவிக்கையில் . எங்களது நகைக் கிளைகளில் 200 பேர்க்கும் அதிகமானோா் தொழில் வசதிகளைப் பெற்றுள்ளனா். ஏற்கனவே அநுராதபுரம், குருநாகல், நுகேகொடை ஆகிய நகரங்களில் கிளைகள் அமையப்பெற்றுள்ளன.
இது பம்பலப்பிட்டியில் 4வது கிளையாகும். இத்துறயில் 76 ஆண் டுகள் முன்பு எனது தந்தை ஆரம்பித்திருந்தாா். தற்பொழுது எனது தலைமையில் இந் நிறுவனம் நாட்டில் பல பாகங்களில் வெடிங் றிங்க திருமண மோதிரம் வடிவமைப்பிலும் அதன் வர்த்தகத்திலும் மேலோங்கி உளள்தாக ரியாஸ் மீரா தெரிவித்தாா்.
0 comments :
Post a Comment