நிந்தவுர் மீராநகர் பிரதான வீதியைச் சேரந்த 5 வயதேயான சிறுமி றனீஸ் பாத்திமா அனா சாய்ந்தமருதில் நேற்று ( 17 ) இடம்பெற்ற மருதியன் பிரிமியர் லீக் கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிநாள் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனைத் தொகுதி அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபாவினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
52 மரக்கறிகளின் பெயர்களை மிக வேகமாக 30 வினாடிகளில் அடையாளம் கண்டு உலக சாதனை புரிந்து சர்வதேச சாதனையை பதிவிட்டுள்ளார்.
ஆசிய சாதனைப் புத்தகத்தில் GRAND MASTER எனும் மகுடம் சூடிய இலங்கையின் முதலாவது சிறுமியென்ற பெருமையையும் தனதாக்கின் கொண்டவர்.
அமெரிக்க சாதனை புத்தகத்தில் ( WORLD CHAMPION ) உலக சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.
ஐரோப்பிய சாதனை புத்தகத்தில் பல நாட்டு சிறார்களின் சாதனையை முறியடித்து தனது பெயரை பதித்த பெருமையும் இவரையே சாரும்.
0 comments :
Post a Comment