தேர்தல் காலம் தொடக்கம் இன்றுவரை அம்பாரை மாவட்ட அரசியலில் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டு வரும் றிசாட் எம்பி; தான்தோன்றித்தனமாக அம்பாரை மாவட்டம் வந்து முஷாரப் எம்பிக்கு எதிராக கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
உங்களுடைய கருத்துக்களுக்கு முஷாரப் எம்பி பதில் தர தொடங்கினால்,உங்கள் மாயாஜால அரசியலின் அஸ்திவாரம் பிடுங்கி எறியப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது பற்றி நீங்கள் அறிவீர்கள்.
முஷாரப் எது செய்தாலும் அம்பாரை மாவட்டக் கோமாளிகளோடு சேர்ந்து தடுத்து நிறுத்தி மக்களுக்கான நன்மைகளை பெற்றுக்கொடுப்பதில் ஆரம்பம் தொட்டே தயக்கம் காட்டி வரும் உங்களைப் போன்ற ஒருதலைப்பட்ச தலைமையோடு எப்படி பயணம் செய்வது?
அம்பாரை மாவட்டம் வந்து ஒரு தலைப்பட்சமாக உளருவதை நிறுத்திக் கொள்ளுங்கள்,உங்கள் கைதின் போது உங்களுக்கும் முஷாரப் எம்பிக்கும்,இந்த அரசுக்கும் இடையில் நடந்தேறிய அத்தனை விடயங்களும் நாமறிவோம்!
தேர்தலின் பின்னரான உங்களுடைய முதலாவது கைதின் போது “தலைவரே உங்களை இந்த அரசு விடுதலை செய்யாவிடின் என்னுடைய பாராளுமன்ற உறுப்புரிமையை தூக்கி எறிவேன்” என்று பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் சொன்னது தொடக்கம் அதற்கு நீங்கள் வழங்கிய பதில்கள், நீங்கள் தொடர்பு கொண்ட அரசாங்க பிரதிநிதிகள் என அனைத்தும் அறிவோம்.
நீங்கள் சிறையில் ராஜா மாதிரி வாழ்ந்துவிட்டு தொலைபேசி உற்பட அத்தனையையும் பாவித்துவிட்டு மக்கள் முன்னர் அனுதாப கண்ணீர் வடித்த கதைகளை சொல்ல வேண்டுமா ?
முஷாரப் எம்பியை உங்களது அம்பாரை மாவட்ட உளரல்களுக்கு பதில் தர வைத்து விடாதீர்கள்,எங்களையும் எழுத வைத்துவிடாதீர்கள்!!
0 comments :
Post a Comment