சம்மாந்துறை புளக்" ஜே" தெற்கு அணைக்கட்டு வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளிவாசல் மற்றும் அன்வர் இஸ்மாயில் பாடசாலை,
மையவாடி ஊடாக குறுக்கறுத்துச் செல்லும் கைகாட்டி பிரதான வாய்க்காலில் மேலாக மேன்பாலம் அமைக்கும் வேலைத் திட்டத்திற்கான அடி கல் நடும் நிகழ்வு அண்மையில் றஹுமத் பவுன்டேசன் தலைவர் றஹ்மத் மன்சூர் அவர்களினால் நடப்பட்டது
மஷூரா குழு தலைவர் அல் ஹாபிழ் இர்பான அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் காதர் பலாஹ் பள்ளி வாசல் தலைவர் ,செயலாளர் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் மற்றும் நீர்ப்பாசன தொழில்நுட்ப உதவியாளர் யாகூப் என பலரும் கலந்து கொண்டனர்
இந்த பாலத்தை அமைப்பதன் மூலம் சிரமத்திற்கு மத்தியில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு வருபவர்கள் பாடசாலைகளுக்கு செல்லக் கூடியவர்கள் மையவாடிக்கு செல்லக் கூடியவர்கள் என பலரும் நன்மை அடைவார்கள் மேலும் தண்ணீர் ஆற்றில் திறக்கும் போது ஏற்படும் அசாதாரண சூழ்நிலையும் இல்லாமல் ஆக்கப்படும் இதற்கான முழு வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்து Y.W.M.A அமைப்பின் உதவியுடன் மிக குறிப்பிட்ட நாட்களில் முடிப்பதற்கு உறுதி பூண்டதுடன் தூவா பிரார்த்தனையும் இடம் பெற்றது.
0 comments :
Post a Comment