கிராமத்தில் ஒரு சுயதொழில் முயற்சியாளரை ஊக்குவித்தல் வேலைத்திட்டம் ஆரம்பம்



நூருல் ஹுதா உமர்-
னாதிபதியின் சிந்தனையில் உருவான சௌபாக்கிய வேலைத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் இறக்காமம் பிரதேச செயலகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஜனாதிபதியின் "சௌபாக்கிய வாழ்வாதார உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வேலைத்திட்டம்" எனும் கருப்பொருளின் கீழ் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதன் ஊடாக சுயதொழில்களை வலுவூட்டி அவர்களின் சுயதொழில் முயற்சிகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது.

கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின், விதாதா வள நிலையத்தின் "ஒரு கிராமத்தில் ஒரு சுயதொழில் முயற்சியாளரை ஊக்குவித்தல்" நிகழ்ச்சி திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தித்திறனை மேலும் மேம்டுத்தும் நோக்கில் அனைத்து கிராம சேவக பிரிவுகள் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) தலைமையில் பிரதேச இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மேலும் இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல் உட்பட கணக்காளர் றிம்ஷியா அர்சாட், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், விதாதாள வள நிலையத்திற்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஜி.கே.முஹம்மட், விதாதா நிலைய கள உத்தியோகத்தர் ஏ. ஜனூஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :