மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான தொழில் நுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையம்!



ஏறாவூர் நிருபர் நாஸர்-
ட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான தொழில் நுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையம் இன்று 09.03.2022 சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது.
வலயக் கல்விப்பணிப்பாளர் டாக்டர் செய்யித் உமர் மௌலானா இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
கிழக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்டுள்ள 'ஏ" தரத்திலான முதலாவது தொழில் நுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு அமைச்சின் புதிய கல்வி சீர்திருத்த முன்மொழிவினை அமுல்படுத்துவதற்கு இணைவாக தொலைக்கல்வி வலுவூட்டல் செயற்றிட்டத்தின்மூலம் நாடளாவிய ரீதியில் தகவல் தொழில் நுட்ப மற்றும் தொலைக்கல்வி மத்திய நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்ட முதலாவது நிலையம் ஓட்டமாவடி பாலிகா தேசிய பாடசாலை வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழா நிகழ்வில் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சரின் இணைப்புச்செயலாளர் கலாநிதி எம்பிஎம். முஸம்மில், பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான எம்ஜேஎப். றிப்காää எம்எச்எம். றமீஸ்ää ஜே.தாஜுன் நிசா, வீரீ. அஜ்மீர் , கோட்டக்கல்விப்பணிப்பாளர்கள், உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள்ää பாட இணைப்பாளர்கள் பாடசாலை அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிலையத்தில் பயிற்சியினை பூர்த்தி செய்தவர்களுக்கு பல்கலைக்கழக பட்டத்திற்குச் சமனான என்விகியு - 4 தர சான்றிதழ் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :