தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயம் சரித்திர சாதனை.



பி.எம்.எம்.ஏ.காதர்-
ரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயம் சரித்திர சாதனை படைத்துள்ளது.1959ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இப்பாடசாலை கடற்கரையோரத்தை அண்மித்த பாடசாலையாகும்.கடந்த காலங்களில் கடமையாற்றி அதிபர்கள் பல முயற்சிகளைச் செய்த போதிலும் தரம் ஐந்த புலமைப்பரில் பரீட்சையில் முன்னேற்றங்கள் காணாத நிலையில் 2018ஆம் ஆண்டு இரண்டு மாணவர்கள் சித்தியடைந்ததே உச்ச சாதனையாகும்.

அதன் பின்னர் எவருமே சித்தியடையாத நிலையில் கொரோனா காரணமாக நாட்டில் பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில் 2021ஆம் ஆண்டு 08ஆம் மாதம் -06ஆம் திகதி இப்பாடசாலையின் புதிய அதிபராகப் பொறுப்பெற்ற அலியார் முகம்மட் அன்சார் எடுத்த தீவிர முயற்சியினால் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் மற்றம் அபிவிருத்தி சபை உறுப்பினர்களின் அர்ப்பணிப்புடன் இவ்வருடம் 52 மாணவர்கள் பரீட்ihக்குத் தோற்றி 40 மாணவர்கள் 70 புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். இவர்களில் அப்துல் அஹத் பாத்திமா-161,ஜஹீர்கான் அதீனா-155,அப்துல் மஜீத் பாத்திமா அஜ்கா-155 ஆகியோர் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இவர்களுடன் கண்பார்வையற்ற விரல்களால் தொட்டு உணர்ந்து வாசித்து பிரைல் மூலமா விடை எழுதும் விஷேட தேவையுடைய மணவன் ஏ.ஆர்.எம்.தன்வீர் ஆசிப்-136 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து இந்த சரித்திர சாதனையைப் படைத்துள்ளனர்.புதிய அதிபராகப் பொறுப்பேற்ற அலியார் முகம்மட் அன்சாரின் வழிகாட்டலில் பிரதி அதிபர் எஸ்.அல்-சப்றி,மற்றும் உதவி அதிபர் திருமதி ஏ.எல்.சப்றீனா பேகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் ஆசிரியைகளான திருமதி எம்.எச்.பஷீறா பேகம்,திருமதி ஏ.எம்.ஹலீபா,மறு;றும் திருமதி ஹுசைன் பீவி திருமதி எஸ்.டீ.எஸ்.அதீதா.ஆசிரியர் ஏ.டபள்யு.முனவ்வர் ஆகியோரின் கற்பித்தலில் இந்த நான்கு மாணவர்களும் சித்திடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :