அழுத்தம் இல்லாத எதிர்காலம்" எனும் தொனிப்பொருளில் தென்கிழக்கு பல்கலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ்
மற்றும் கல்முனை சுகாதார பணிமனையுடன் இணைந்து சமீபத்திய உடன்படிக்கையின் அடிப்படையில், தொடர்ச்சியான சுகாதாரப் பேச்சுக்கள், கலந்துரையாடல்களின் மூலம் இளங்கலை பட்டதாரிகள், ஊழியர்கள் மற்றும் சமூக பொது சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஊட்டுவதற்கான ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர், பேராசிரியர் ஏ.றமீஸ், பல்கலைக்கழக நூலகர் எம்.எம் ரிபாயுடீன் மற்றும் கல்முனை RDHS இன் பிராந்திய பணிப்பாளர் கலாநிதி ஐ.எல்.எம். ரிபாஸ் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தின் கருத்தரங்கு அறையில் தொடர்ச்சியான சுகாதாரப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று கல்வித் திட்டங்களின் மூலம் மக்கள், மாணவர்கள் மற்றும் ஊழியர்களிடையே மன அழுத்தத்தை தடுப்பதை மையமாகக் கொண்டு, சமூக சுகாதாரம், நல்வாழ்வை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாக்கும் இலக்குடன் பல்வேறு அழுத்தமான சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது.
சிறந்த சுகாதார விரிவுரைத் தொடரின் முதல் விரிவுரையாக RDHS- கல்முனை பிராந்திய மனநலப் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ள டாக்டர் எம்.ஜே. நௌஃபெல் அவர்களால் "அழுத்தம் இல்லாத எதிர்காலம்" என்ற தலைப்பிலேயே கடந்த 16 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு நடாத்தப்பட்டது. மன அழுத்ததிற்கு உள்ளாகும் பிரிவினர், மன அழுத்ததிற்கு உள்ளாவதற்கான காரணங்கள், மன அழுத்தத்திற்கு உள்ளானவர்களின் தோற்றம், செயற்பாடுகள் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் போன்ற முக்கியமான கருத்துக்கள் இவரின் விரிவுரையில் காணப்பட்டது.
அத்தோடு பார்வையாளர்களின் கேள்விகள், சந்தேகங்கள் போன்றன விரிவுரையாளரிடம் வழங்கப்பட்டு அதற்கான தீர்வுகளும் முடிவுகளும் வழங்கி, எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் இதன் தொடர் நிகழ்வுகள் இவ்வாறு சிறப்பாக நடைபெற வேண்டும் எனக்கூறி இனிதே நிறைவு பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி 01.30 மணி வரைக்கும், https://www.facebook.com/seuLibrary) மற்றும் RDHS (https://www.facebook.com/rdhskalmunai)
எனும் பல்கலைக்கழக முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment