சமூக ஊடறுப்பு ஒன்றின் மூலம் முன்பிள்ளைப் பருவ பிள்ளைகள் ஒட்டு மொத்த விருத்திக்காக களத்தில் கலந்துரையாடல் ஒன்றினை கட்டியெழுப்புதல் தொடர்பிலான விழிப்பூட்டும் நிகழ்வு தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகத்தினால் இன்று (23) ஏற்பாடு செய்யப்பட்ட இவ் நிகழ்வானது பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்றது.
முன்பிள்ளைப் பருவ ஆசிரியைகள், ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டதுடன் குழு கலந்துரையாடல் ஊடாக பல்வேறு விடயங்கள் இதன் போது பயிற்சியளிக்கப்பட்டன. வளவாளராக மாவட்ட முன் பிள்ளை பருவ பணியகத்தின் செயலாற்றுப் பணிப்பாளர் திருமதி ஜீ.எச்.தாமர கீதானி செயற்பட்டார்.
இவ் விழிப்புணர்வூ மூலம் முன்பிள்ளைப் பருவ ஆசிரியைகளின் தலைமைத்துவ திறன் கட்டியெழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.அன்வர்தீன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment