காரைதீவு வரலாற்றில் முதன்முறையாக காரைதீவு பயர் விளையாட்டு கழகம் அஸ்கோ அமைப்புடன் இணைந்து நடத்திய மின்னொளியிலான மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் இன்று (20) இரவு காரைதீவு விபுலானந்தர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 32 தமிழ், முஸ்லிம், சிங்கள விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற இந்த சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டி சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகத்திற்கும் சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் இடம்பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டு கழகம் முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் 4.2 ஓவர்கள் முடிவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 31 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. முதலாவது பந்துவீச்சு ஓவரில் 04 விக்கட்டுக்களை இழந்த சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக் கழகம் ஆரம்பம் முதல் தடுமாறி முதல் 10 பந்துக்களில் 05 விக்கட்டுக்களை இழந்து தவித்தது. மத்திய வரிசையில் களமிறங்கிய அதிரடி துடுப்பாட்ட வீரர் இஷ்ரத் அதிரடியாக துடுப்பெடுத்தாடி மூன்று ஆறு ஓட்டங்கள் அடங்களாக 23 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பதிலுக்கு 32 ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டு கழகம் ஆரம்பம் முதல் அதிரடியாக துடுப்புபெடுத்தாடி வந்த நிலையில் 4.2 ஓவர்கள் முடிவில் 02 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து 05 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியிலக்கை அடைந்தனர்.
இத்தொடரின் தொடராட்டக்காரர் விருதை 65 ஓட்டங்களையும், 03 விக்கட்டுக்களையும் வீழ்த்திய சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழக வீரர் அதிப் தனதாக்கி கொண்டார். இறுதியாட்ட நாயகனாக முதல் ஓவரில் பிளாஸ்டர் அணியின் முக்கிய 04 விக்கட்டுக்களை வீழ்த்திய சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழக வீரர் நஜாத் தனதாக்கினார். தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக பிளாஸ்டர் அணியின் றிழ்வானும், அதிக ஓட்டங்களை குவித்த வீரராக முஸாபிர் தெரிவானார். பரிசளிப்பு நிகழ்விற்கு அஸ்கோ அமைப்பின் செயலாளர், பொருளாளர், நிர்வாக உறுப்பினர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றிக்கேடயங்களை வழங்கி வைத்தனர். சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த மருதம் பிரிமியர் லீக் சுற்றுப்போட்டியிலும் பிளாஸ்டர் வி.கழகம் இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment