நாடு பாரிய பொருளாதார பிரச்சினையில் தவிக்கும் போது எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பது போல் சாணக்கியன் எம். பி யின் அணியினர் மருதானை ஜும்ஆ பள்ளி முன்பு பயங்கரவாத சட்டத்தை நீக்குமாறு ஆர்ப்பாட்டம் செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தை கொண்டு வந்தது யார் என்பது இவர்களுக்கு தெரியுமா? 1979ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் அன்றைய ஜனாதிபதி ஜேஆர் ஆகும். இச்சட்டம் நாட்டுக்கு மோசமானது என்றால் கடந்த ரணில், சஜித் பொல்லாட்சியில் முற்றாக அதை ஒழித்திருக்கலாம். அப்படி செய்யாமல் தூங்கிக்கொண்டிருந்து விட்டு இப்போது புலம்புகிறார்கள்.
ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து தாக்கியவனுகளை பிடிக்காமல் தாக்கும் கோஷ்டியை பிடித்துக்கொடுத்த முஸ்லிம்களை சிறை பிடிக்க ரணில், சஜித் அரசு மீண்டும் பயங்கரவாத சட்டத்தை கொண்டு வந்து 3500க்கு மேற்பட்ட முஸ்லிம்களை கைது செய்தது என்பது மறந்து விட்டதா? அப்போதெல்லாம் அரசுக்கு ஜால்ரா அடித்த சாணக்கியனின் தமிழ் கூட்டமைப்பும், ஹக்கீமும், ரிசாதும், முஜிபுர்ரஹ்மானும் இப்போது பயங்கரவாத சட்டத்தை நீக்க வேண்டும் என ஒப்பாரி வைப்பது ஏன்?
அன்றைய ரனில், சஜித் ஆட்சியில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களில் பெரும்பான்மையானோரை சரியான விசாரணையின் பின் எமது இந்த அரசு விடுவித்துள்ளது.
ஆனாலும் நாட்டில் பிரிவினையை உருவாக்கி, வடக்கிலிருந்து முஸ்லிம்களின் அனைத்து சொத்துக்களையும் கொள்ளையடித்து விரட்டியது போன்று கிழக்கிலிருந்தும் முஸ்லிம்களை விரட்ட சாணக்கியனுக்கு பயங்கரவாத சட்டம் தடையாக இருக்கலாம், ஆனால் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு இச்டட்டம் தடையானதல்ல, மாறாக அதிக நன்மை கொண்டதாகும்.
இந்த உண்மைகள் சாணக்கியனுடன் நின்ற ரிசாத் பதியுதீன், முஜிபுர்ரஹ்மானுக்கு தெரியாதா அல்லது கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என எதிர்க்கிறார்களா? இவர்களின் பின்னால் இருந்து இயக்கும் தமிழ் டயஸ்போராவின் பணத்துக்கு இவர்கள் ஆடுகிறார்களா என கேட்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment