"வரவுசெலவு திட்டத்திலிருந்து ஒரு இலட்சம் பணிகள்" செயற்றிட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் மதவாச்சி மக சியம்பலகஸ்கட முஸ்லிம் வித்தியாலத்தின் பிரதான மண்டபத்திற்கான மேடைப்பகுதியினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று (2022.03.14) பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது.
பாடசாலை அதிபர் அல் ஹாஜ் எம். ஹம்துன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றார்கள், ஊர் நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
0 comments :
Post a Comment