ஸ்ரீலங்கா மொபிடல் நிறுவனம் ஒழுங்கு செய்திருந்த 37வது இளையோர் மற்றும் இடைநிலை ( National Rowing Championship ) தேசிய ரோவிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் பல்வேறு வயதுப் பிரிவுகளில் , இலங்கை அமெச்சூர் ரோவிங் அசோசியேஷன் (ARASL) மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகள் தியவண்ணா ரோவிங் மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை அமெச்சூர் ரோவிங் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஸ்ரீலங்கா டெலிகொம் குழுமத்தின் தற்போதைய தலைவருமான ரொஹான் பெர்னாண்டோ, பிரதம அதிதியாகவும் , இலங்கை அமெச்சூர் ரோவிங் சங்கத்தின் (ARASL) தலைவர் திமுத் குணவர்தன கௌரவ அதிதியாகவும் மற்றும் இலங்கை படகோட்டுதல் சங்கத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment