எம்பிலிப்பிட்டியவில் அமைந்து உள்ள இம்மையம் 35 வருட கால வரலாற்றை கொண்டது. ஆயினும் மையத்தின் பணிப்பாளராக 06 மாதங்களுக்க்கு முன்னர் பதவியேற்ற அஷ்ரப் இதன் செயற்பாடுகளில் அதிரடியான மாற்றங்களை குறுகிய காலத்துக்குள் ஏற்படுத்தி இருக்கின்றார்.
குறிப்பாக மையத்தின் வரலாற்றில் முதன்முறையாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட தொடங்கி உள்ளன. இவர் இப்புரட்சிகரமான மாற்றத்தை வவுனியா பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பித்து உள்ளார்.
இப்பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தலைமைத்துவ மேம்பாட்டுக்கான 05 நாட்கள் வதிவிட பயிற்சி முகாம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இடம்பெற்று நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
இது தொடர்பாக நாம் பணிப்பாளர் அஷ்ரப்பை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தெரிவித்தவை வருமாறு
எதிர்கால தலைவர்களை உருவாக்குவதன் மூலம் சமூக நல்லிணக்கம், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றை உருவாக்கவும், நிலைநாட்டவும் முடியும். இதில் எமது மையத்தின் பணி, பங்கு, பங்களிப்பு ஆகியன காத்திரமானவை.
ஆயினும் எமது மையத்தால் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி தலைமைத்துவ மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டு இருப்பது மையத்தின் வரலாற்றில் புதிய மைல்கல் மாத்திரம் அல்ல, காலத்தின் தேவையும் ஆகும்.எமது பணி தொடர்ந்து இன்னமும் உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும்.
இத்தருணத்தில் எமக்கு எப்போதும் உந்து சக்தியாக அமைந்து இருக்கின்ற இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சு செயலாளர் அனுராத விஜயகோனுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன், அத்துடன் எம்முடன் கை கோர்த்து உள்ள பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்.
0 comments :
Post a Comment