நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு சீராக வழங்கப்பட்டு வருகின்றது.
இருந்த போதிலும் இன்று இம்மாவட்டத்தில் உள்ள நற்பிட்டிமுனை லிட்ரோ எரிவாயு விநியோக நிலைய மொத்த விற்பனை நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட சுமார் 1000 க்கும் அதிகமான சிலிண்டர்கள் கடும் நெருக்கடிக்கு மத்தியில் கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை ,சாய்ந்தமருது ,காரைதீவு, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சம்மாந்துறை ,அக்கரைப்பற்று, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு பொலிஸார் விசேட அதிரடிப்படையினரின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகின்றன.
குறித்த மொத்த விற்பனை நிலையத்தில் எரிவாயு கொள்வனவு செய்ய வருகைதந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை அடுத்து எரிவாயு நிறுவன அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த சுமார் 10 க்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நிலைமை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நாடு பூராகவும் தட்டுப்பாடாக இருந்த எரிவாயு சிலிண்டர்கள் தற்போது நாட்டில் உள்ள களஞ்சிய சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்ற நிலையில் எரிவாயு விநியோகம் இடம்பெறுவதாக தகவல் பரவியதை அடுத்து பொது மக்கள் அதனை பெற்றுக் கொள்வதற்கு அதிகாலையில் இருந்தே காத்திருந்து எரிவாயு கிடைக்காமை காரணமாக அமைதி இன்மை ஏற்பட்டிருந்தது.
எனினும் எரிவாயு களஞ்சிய பகுதியில் அமைதியின்மை சீர் செய்யப்பட்டு அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் லிட்ரோ எரிவாயு கட்டம் கட்டமாக வழங்கப்பட்டது.
இந்த எரிவாயு கொள்வனவில் சிறுவர்கள் பெண்கள் அதிகளவாக வருகை தந்து பெற்றிச்சென்றதை காண முடிந்தது.
மேலும் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருந்த சிலருக்கு அது கிடைக்காமையால் அமைதியின்மையில் ஈடுப்பட்டுள்ளனர்.எனினும் கல்முனை பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment