பாக்கிஸ்தான் தேிசிய தினத்தினை முன்னிட்டு கொழும்பு 7ல் உள்ள பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகர் அலுவலகத்திலும் 23.03.2022 தேசிய தினம் கொண்டாடப்பட்டடது. இவ் வைபவத்தில் பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிர் உமா் பாருக் புர்கி கை (எம்) அவா்கள் பாக்கிஸ்தான் தேசிய கொடியை ஏற்றிவைத்தாா்.
இதேவேளை இலங்கை-பாக்கிஸ்தான் நட்புறவின் ஓர் அங்கமாக பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகர் கட்டிடத்தில் உள்ள வெளிச் சுவரில் பாக்கிஸ்தான் நாட்டில் உள்ள கந்தகார பிராந்தியத்தில் உள்ள பௌத்த நிலையங்களைப் பிரதிபலிக்கும் சித்திரவடிவமைப்பினையும் பாக்கிஸ்தானியா் ஒருவா் வரைந்து காட்சிப்படுத்தலையும் உயா் ஸ்தானிகர் பாா்வையிட்டாா்.
பாக்கிஸ்தான் ஜனாதிபதி, டொக்டா் அரிப் அலவி மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர்களது தேசிய தின செய்திகளை உயா்ஸ்தானிகர் அலுவலகச் செயலாளா்களினால் வாசிக்கப்பட்டன.
இவ் வைபவத்தில் உரையாற்றிய பாக்கிஸ்தான் உயா் ஸ்தானிகர் உமா் பாருக் புர்கி -1948 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை - பாக்கிஸ்தான் நடபுறவுகள் இருந்து வருகின்றது. முன்னாள் பிரதமா் டி.எஸ். சேநாயக்க அவா்கள் 1948ல் பாக்கிஸ்தானுக்கு வருகை தந்திரந்தாா். அக் காலத்திலிருந்தே எமது இரு நாடுகளுக்குமான நடபுறவுகள் நிலவிவருகின்றன.
அன்மையில் இலங்கை வருகை தந்த பிரதமா் இம்ரான்கான் 48 வர்த்தகா்களுடன் வர்த்தக உடன்படிக்கைகளைச் கைச்சாத்திடப்பட்டது . இலங்கையில் பயங்கரவாதம் நிலவிய காலத்திலும் பாதுகாப்புத்துறை சம்பந்தமாக பல்வழிகளிலும் நாம் இலங்கைக்கு உதவியுள்ளோம். 2500 வருட ங்கள் கொண்ட பௌத்த மத வரலாற்று சின்னங்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன. அதனை இலங்கை பௌத்தா்கள் பாா்வையிட வசதி செய்தோம். பாக்கிஸ்தானில் உள்ள கந்தகரா எனும் பௌத்த கலாச்சார மையமும் உள்ளது . அதனை தரிசிப்பதற்காக இலங்கையில் உள்ள பௌத்தா்கள், பௌத்த மதத் தலைவா்கள் பாக்கிஸ்தான் நாட்டுக்கு அடிக்கடி விஜயம் மேற்கொள்கின்றனா். பாகிஸ்தானியர் இலங்கையில் பல்வேறு வர்த்தகத்துறையில் முதலிட்டுள்ளனா் . முதன் முதலில் பாக்கிஸ்தானுடன் நட்பு கொண்ட முதலாவது நாடு இலங்கையாகும் . பாக்கிஸ்தான் பிரதமா் இம்ரான்கான் என்றும் இலங்கை உதவி கேட்கும்போதேல்லாம் உதவுவதற்கு தயாரக உள்ளது. தற்பொழுது முதல் முறையாக எண்ணெய்வள நாடுகள் கொண்ட அமைப்பு நாடுகளின் வெளிநாட்டு அமைச்சா்கள் மாநாடு பாக்கிஸ்தானில் நடைபெறுகின்றது. என உயா் ஸ்தானிகா் அங்கு உரையாற்றினாா்.
0 comments :
Post a Comment